வெளிமாநில தொழிலாளர்களுக்காக - கரோனா தொற்று தடுப்பூசி முகாம் நடத்த வலியுறுத்தல் :

வெளிமாநில தொழிலாளர்களுக்காக  -  கரோனா தொற்று தடுப்பூசி முகாம் நடத்த வலியுறுத்தல் :
Updated on
1 min read

திருப்பூரில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளர் களுக்கும் முன்னுரிமை அடிப்படை யில் கரோனா தடுப்பூசிபோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: திருப்பூரில் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. பெரிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி தட்டுப்பாடின்றி போடப்படுகிறது. ஆனால் சிறு உணவகங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை. எனவே அவர்களின் நலன் கருதி தனிகவனம் செலுத்தி கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in