

புதுதில்லியில் போராடும் விசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஈஞ்சம்பாக்கம், பெரியகரும்பூர், புதுப்பாக்கம், செம்பரம்பாக்கம், கோவிந்தவாடி அகரம், படுநெல்லி, கம்மாரப்பாளையம், மணியாச்சி, சம்பந்தபுரம், வரதபுரம், மூலப்பட்டு, பரந்தூர் உள்ளிட்ட 23 கிராமங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சாரங்கன், மாவட்டச் செயலர் கே.நேரு மற்றும் விவசாயிகள் சங்கம், சிஐடியூ நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.