

திருநெல்வேலி நியுசெஞ்சுரி புத்தக நிறுவன கிளை மேலாளர் ஆர். மகேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, வைகுண்டம் ஆதிச்சநல்லூர் தமிழ்ச் சங்கம், நியுசெஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் 34-வது தேசிய புத்தக கண்காட்சி வைகுண்டம் குமரகுருபரர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (30-ம் தேதி) முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சி நடைபெறும். தினமும் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பள்ளி நூலகங்களுக்கு வாங்கும் நூல்களுக்கு 15 சதவீத சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.