

ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாவட்ட குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் தாளவாடி அடுத்த ஒங்கனபுரம் கிராமத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். காரில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த வீரன்னா (48) என்பவரை கைது செய்த போலீஸார், கார் மற்றும் அரிசியை பறிமுதல் செய்தனர்.