திண்டுக்கல்லில்  தம்பதி தீக்குளிக்க முயற்சி :

திண்டுக்கல்லில் தம்பதி தீக்குளிக்க முயற்சி :

Published on

திண்டுக்கல் கோபால் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பவுன்தாய். கோபால் நகரிலுள்ள வினோத்கண்ணன் என்பவரது வீட்டில் ஒத்திக்கு ரூ.3 லட்சம் கொடுத்து வசித்தனர். ஒப்பந்த காலம் முடியும் முன்பே, வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் வற்புறுத் தினார். மேலும் ஒத்திப் பணத்தை திருப்பித்தராமல் மிரட்டல் விடுத்து வந்தார்.

இதனால் மனமுடைந்த முருகனும், அவரது மனைவியும் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை அங்கிருந்த போலீ ஸார் மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in