Published : 28 Jul 2021 03:19 AM
Last Updated : 28 Jul 2021 03:19 AM

ரயில் மறியலில் ஈடுபட்ட பயணிகள் மீது வழக்கு :

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அன்வர்திகான்பேட்டை ரயில் நிலையத்தில் ஏலகிரி விரைவு ரயிலை மறித்து பயணிகள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏலகிரி விரைவு ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதத்துக்குப் பிறகு சென்னை நோக்கி புறப்பட்டது.

சீசன் டிக்கெட் பயணிகளுக்கு சிறப்பு முன்பதிவு ரயிலில் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பயணிகளின் கோரிக்கை குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஏலகிரி ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மீது அரக்கோணம் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x