சாலை விபத்தில் : ஆசிரியர் உயிரிழப்பு :

சாலை விபத்தில் : ஆசிரியர் உயிரிழப்பு :
Updated on
1 min read

உதகை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

உதகையை அடுத்துள்ள லவ்டேலில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் லாரன்ஸ் பள்ளியில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டணத்தை சேர்ந்த அஸ்லம்முகமது (33). இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று, உதகையில் இருந்து லவ்டேலுக்கு செல்லும் வழியில் ரிச்சிங் காலனி பகுதியில் ஸ்கூட்டரில் அஸ்லம் முகமது வந்து கொண்டிருந்தார். எதிரே லவ்டேலில் இருந்து வந்துகொண்டிருந்த பிக்-அப் வாகனம் மோதியதாக கூறப்படுகிறது.

இதில், அஸ்லம் முகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு லவ்டேல் போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in