Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM

ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் :

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப் பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யப்பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் பெரும்புதூர் உட்கோட்டங்களில் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக் கடையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ன. மொத்தம் 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டன.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x