

செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த் துறையில் வட்டாட்சியர் நிலையில் உள்ளவர்களை, நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் செய்து ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு வட்டாட்சியராக ஆ.வாசுதேவன், திருக்கழுக்குன்றம் வட்டாட்சியராக இல.சிவசங்கரன், மதுராந்தகம் வட்டாட்சியராக நடராஜன், திருப்போரூர் வட்டாட்சியராக ராஜன், செய்யூர் வட்டாட்சியராக வெங்கட்ரமணன், பல்லாவரம் வட்டாட்சியராக ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்களாக மதுராந்தகத்துக்கு துரைராஜன், செங்கல்பட்டுக்கு பருவதம், திருக்கழுக்குன்றத்துக்கு புஷ்பலதா, திருப்போரூருக்கு சுமதி, தாம்பரத்துக்கு ரமா, வண்டலூருக்கு சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக செங்கல்பட்டுக்கு ரஞ்சனி, மதுராந்தகத்துக்கு பாலாஜி, தாம்பரத்துக்கு இராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பணி மாறுதல் செய்யப்படும் வட்டாட்சியர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும். பணி நியமனத்தின் மீதான எந்தவித கோரிக்கையும் கூடாது. விடுப்பு எடுக்கக் கூடாது. புதிய பணியிடத்தில் சேராதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.