திண்டிவனம் அருகே - கத்தி முனையில் 50 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை :

திண்டிவனம் அருகே  வெளியனூர் கிராமத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்களிடம் விழுப்புரம் எஸ்பி நாதா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
திண்டிவனம் அருகே வெளியனூர் கிராமத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்களிடம் விழுப்புரம் எஸ்பி நாதா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
Updated on
1 min read

திண்டிவனம் அருகே வெளியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு(63). இவர் அதே ஊரில் மளிகைக்கடை நடத்திவருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தன் மனைவி முத்து லட்சுமி (60), மகள் விஜயகுமாரி (29) ஆகியோருடன் வீட்டை பூட்டிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மாஸ்க்அணிந்த 4 பேர் கொண்ட கும்பல்பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தது. தூங்கிக்கொண்டிருந்த வேணு குடும்பத்தாரின் கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டி, பீரோ சாவி எங்குள்ளது என கேட்டனர். சாவியை எடுத்து பீரோவை திறந்து 50 பவுன்நகை, 3 மொபைல் போன், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளை யடித்தனர். இவர்களுடன் வந்தமற்றொரு நபர் வீட்டிற்கு வெளியே நின்றபடி யாராவது வருகிறார்களா என கண் காணித்துக்கொண்டிருந்தார். கொள்ளையடித்த நகை மற்றும் வெள்ளிபொருட்களுடன் இக்கும் பல் தப்பிச் சென்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகவல் அறிந்த விழுப்புரம் எஸ்பி நாதாநேரில் விசாரணை மேற்கொண்டார். கடந்த 23ம் தேதி இதே காவல்எல்லைக்குட்பட்ட ஜக்காம் பேட்டை பகுதியில் வசிக்கும் ஜெகன், ரமேஷ் ஆகியோர் வீட்டில்18 பவுன் நகை கொள்ளையடிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in