Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

மதுரையில் வரைபட அனுமதி பெற சிறப்பு முகாம் :

மதுரை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் கூறியுள்ள தாவது: வரைபட அனுமதி, லேஅவுட் அனுமதிக்கான கட்டணம் செலுத் துதல், தனித்த மனை வரன்முறை செய்தல், திட்ட அனுமதி உள்ளிட்ட சேவைகளுக்கான `நல்லதொரு நகரமைப்பு' சிறப்பு முகாம் இன்று (ஜூன் 27 ) முதல் 30-ம் தேதி வரை காலை 9.30 முதல் பகல் 1.30 மணி வரை நடைபெறும். மண்டலம் 1-க்கு ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மண்டலம் 2-க்கு கே.கே.நகரில் உள்ள வக்ஃபு வாரிய கல்லூரியிலும், மண்டலம் 3-க்கு காமராஜர் சாலையில் உள்ள சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மண்டலம் 4-க்கு வடக்கு வெளி வீதியில் உள்ள சேதுபதி பள்ளியிலும் முகாம் நடைபெற உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x