காவலர் பணி உடற்தகுதி தேர்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு : ஐஜி, டிஐஜிக்கள் ஆய்வு

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற இளைஞரின் மார்பை அளவீடு செய்த போலீஸார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற இளைஞரின் மார்பை அளவீடு செய்த போலீஸார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
Updated on
1 min read

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வில் மதுரை மாவட்டத்தில் 4427 பேர் தேர்வாகினர். இதில் 1700 பேருக்கு மதுரை ஆயுதப்படை மைதானத் திலும், 2727 பேருக்கு ரேஸ் கோர்ஸ் மைதானத்திலும் உடற்தகுதித் தேர்வு நேற்று காலை தொடங்கியது.

கரோனா பரிசோதனை சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு மற்றும் 1500 மீ. ஓட்டத்தேர்வுகள் நடந்தன. இத்தேர்வு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.

ஆயுதப்படை மைதானத்தில் தென் மண்டல ஐஜி அன்பு, காவல் துணை ஆணையர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் கண்காணித்தனர்.

ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த தேர்வை பணியமைப்புத் துறை டிஐஜி பிரபாகரன், மதுரை காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் ஆகியோர் ஆய்வு செய்து கண்காணித்தனர்.

திண்டுக்கல்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் சரக டிஐஜி என்.எம்.மயில்வாகனன், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோர் பார்வையிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in