Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் டென்னிஸ். இவரது மனைவி மேரிசுஜா. இவர்கள் நேற்று தங்கள் 10 வயது பெண் குழந்தையுடன் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அங்கு குழந்தையுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்கள் கூறும்போது, “ கடந்த 8 ஆண்டுகளாக விநோத நோய் மற்றும் உடல்நலக்குறைவால் படுக்கையிலேயே சிரமமடைந்து வரும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான உதவிகளை செய்யுமாறு அரசை வலியுறுத்தி எந்த நடவடிக்கையும் இல்லை. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மனு அளித்தும் இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை” என்றனர்.
போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, மனுவை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி முத்துபாண்டியன் என்பவர், தனது சொத்தை குடும்பத்தினர் அபகரித்துவிட்டதாகவும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்து போலீஸார் மீட்டு அப்புறப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT