

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்ஐ-க்கள் சிவசாமி, தென்னரசு ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் மரிக்கப்பட்டி பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த லாரி மற்றும் ஆட்டோ வில் 10 டன் ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரிந்தது.இதையடுத்து அரிசியுடன் வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸார் லாரி ஓட்டுநர் கோகுல் (23), ஆட்டோ ஓட்டுநர் இளங்கோ (29) ஆகியோரை கைது செய்தனர்.