

மீஞ்சூரை அடுத்த ஊரணம்பேடு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையத்தின் 4-வது நிலைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இங்கு விமல் என்பவர் ஒப்பந்ததாரராக உள்ளார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அங்கிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டர் திருடுபோனது. இதுகுறித்து, காட்டூர் போலீஸில் விமல் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தி அத்திப்பட்டு, நேரு நகரை சேர்ந்த ஜெயசூர்யா, காந்தி நகரை சேர்ந்த சூர்யா ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த ஜெனரேட்டரை பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த அமிர்தராஜ், வினோத் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.