Published : 25 Jul 2021 03:14 AM
Last Updated : 25 Jul 2021 03:14 AM

சோலையாறு அணையில் 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு : நீலகிரியில் மழை குறைந்ததால் இயல்பு நிலைக்கு திரும்பிய மக்கள்

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இதனால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 164.15 அடியாக உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக, விநாடிக்கு 1,440 கனஅடி தண்ணீரும், சேடல் அணை வழியாக 5,481 கனஅடி தண்ணீரும், முதல் மின்உற்பத்தி நிலையம் வழியாக 400 கனஅடி தண்ணீரும், இண்டாவது நீர் மின்உற்பத்தி நிலையம் வழியாக 618 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின்முக்கிய அணையாக உள்ள சோலையாறு அணை நிரம்பியதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவுவிவரம் (மில்லி மீட்டரில்):சோலையாறு - 132, வால்பாறை-129, மேல்நீராறு - 119, கீழ்நீராறு - 150, பரம்பிக்குளம்- 63, சர்க்கார்பதி-30, பெருவாரிப்பள்ளம்- 47, தூணக்கடவு - 38.

கனமழை காரணமாக, கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து 4 மதகுகள் வழியாக நேற்று முன்தினம் 14ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், இரண்டாவது நாளாக நேற்று 16 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வந்தது. உதகை, தொட்டபெட்டா, மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலைகளில் ராட்சத மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி,அவலாஞ்சியில் 145 மி.மீ., அப்பர் பவானியில் 115 மி.மீ. மழை பதிவானது. குந்தா அணைக்கு விநாடிக்கு 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் முழு கொள்ளளவான 89 அடிக்கு தண்ணீர் நிரம்பியது.

அணையின் பாதுகாப்பு கருதி 300 கனஅடி நீர், இரண்டு மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. பாதுகாப்பு கருதி குன்னூர் முகாமில்4 குழந்தைகள் உட்பட 28 பேர், கூடலூர் புத்தூர் வயல் முகாமில் 25 குழந்தைகள் உட்பட 71 பேர் என மொத்தம் 99 நபர்கள், மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மழையின் தீவிரம் நேற்று குறைந்ததால், மக்கள் நிம்மதியடைந்தனர்.

உடுமலை

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் மழையால், உடுமலையை அடுத்த அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 2-வது நாளாக நேற்றும் அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x