Published : 25 Jul 2021 03:15 am

Updated : 25 Jul 2021 03:15 am

 

Published : 25 Jul 2021 03:15 AM
Last Updated : 25 Jul 2021 03:15 AM

தருமபுரியில் வியாழக்கிழமை தோறும் - மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் :

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் நடந்த விழாவில், மாற்றுத்திறனாளி களுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் திவ்யதர்சினி வழங்கினார்.

தருமபுரி

தருமபுரி அடுத்த அதியமான் கோட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு, ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை வகித்தார். தருமபுரி எம்பி செந்தில்குமார் (திமுக), எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் (பாமக) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில், 1,300 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.97.84 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை ஆட்சி யர் வழங்கி பேசியதாவது:


40 சதவீதம் மாற்றுத்திறன் பாதிப்பு இருந்தாலே மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது.மாற்றுத் திறனாளிகள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதியாக ஒவ்வொரு வாரம் வியாழக் கிழமை வட்டாட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அரசின் நலத் திட்டங்களை முறையாக பயன்படுத்தி அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை எளிதாக்கிக் கொள்ள வேண்டும், என்றார்.

விழாவில், ‘அலிம்கோ’ நிறுவன முதுநிலை மேலாளர் அசோக்குமார், முதன்மை கல்வி அலுவலர் கீதா,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x