நாடகக் கலைஞர்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கல் :

நாடகக் கலைஞர்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கல் :
Updated on
1 min read

கரோனா ஊரடங்கு காரணமாக தொழில் வாய்ப்பை இழந்த நாடகக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அகரவட்டாரம் வரதராஜன் தலைமை வகித்தார். கரிகாலன் உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகி கே.ராஜா வரவேற்றார்.

நிகழ்ச்சியில், 100 நாடகக் கலைஞர்களுக்கு தலா ரூ.1,000 மதிப்புள்ள அரிசி, மளிகைப் பொருட்களை மன்னார்குடி வர்த்தக பிரமுகர் எஸ்.எம்.டி.கருணாநிதி வழங்கினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் காவிரி வெ.தனபாலன், தேவங்குடி வரதராஜன், நீடாமங்கலம் மோகன்தாஸ், ராமலிங்கம், மன்னார்குடி வட்டத் தலைவர் பாலு, மயிலாடுதுறை ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இயல், இசை நாடக நடிகர்கள் சங்கத் தலைவர் தங்க.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ஜோதி மகாலிங்கம் ஆகியோர் நாடகக் கலைஞர்களை ஒருங்கிணைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in