திருப்பூரில் தொழிலாளி கொலை : தாய், மகன் உட்பட 3 பேர் கைது

திருப்பூரில் தொழிலாளி கொலை :  தாய், மகன் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (37).இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் கல்லூரி சாலையில் தங்கி, பிரிண்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

வீரபாண்டி எல்லைக்கு உட்பட்ட கல்லாங்காடு திருக்குமரன் நகரைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (50). வட்டிக்கு பணம் கொடுத்து வந்த வகையில் சந்தோஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி முருகேஸ்வரி வீட்டுக்கு சென்ற சந்தோஷ்குமார், கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக பேசிய போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது மகன் ஆரோக்கியதாஸிடம் (25) முருகேஸ்வரி கூறியுள்ளார். ஆத்திரமடைந்த ஆரோக்கியதாஸ், நண்பர்பாலசுப்பிரமணியன் (25) என்பவருடன் சேர்ந்து முருகேஸ்வரியை சந்திக்க சந்தோஷ்குமாரை வரவழைத்துள்ளார். அங்கு இரும்புக்கம்பியால் அடித்துக் கொலை செய்து, சந்தோஷ்குமாரின் சடலத்தைகல்லாங்காடு பாறைக்குழி பகுதியில் எரித்துள்ளனர். பின்னர், முருகேஸ்வரியின் கணவர் வசிக்கும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆனைமலைபட்டி கிராமத்துக்கு சென்று 3 பேரும் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையே 3 நாட்களாகசந்தோஷ் குமாரின் அலைபேசிஇணைப்பு, அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை. சந்தோஷ்குமாரின் பெற்றோர்மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீடாமங்கலத்தில் இருந்து திருப்பூர் வந்து வீட்டை பார்த்தனர். பின்னர் வீரபாண்டி காவல்துறையினரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், கல்லாங்காடு பாறைக்குழி பகுதியில் நேற்று காலை பாதி அழுகிய நிலையிலும், மீதி எரிந்த நிலையிலும் சடலம் கிடப்பதாக, அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் சம்பவஇடத்துக்கு வீரபாண்டி போலீஸார்சென்று விசாரணை நடத்தியபோது, சந்தோஷ்குமாரின் சடலம் என்பது தெரியவந்தது. வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் அங்கேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வீரபாண்டி போலீஸார் தொடர்ந்து விசாரித்தனர்.

இதுதொடர்பாக முருகேஸ்வரி, அவரது மகன் ஆரோக்கியதாஸ், பாலசுப்பிரமணியன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in