உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை - கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுகவில் மீண்டும் ரகளை :

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கிடையே நடைபெற்ற ஆக்ரோஷமான வாக்குவாதம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கிடையே நடைபெற்ற ஆக்ரோஷமான வாக்குவாதம்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் குறைகூறிக் கொண்டு பேசியதால் கூச்சல் குழப் பம் நிலவியது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்டச் செயலாளர் ஆர்.குமரகுரு தலைமையில் நேற்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் நகர, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு உள் ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், தேர்தலின் போது தொண்டர்களிடம் எவ்வாறு அணுகவேண்டும் என்பதுகுறித்தும் ஆலோசனை வழங்கப் பட்டது.

அப்போது மாவட்டச் செயலாளர்குமரகுரு பேசும் போது, ‘‘பாமகவி லிருந்து சில ஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் இணைந்த ராஜேந்திரன் என்பவர் ஆக்ரோஷமாக எழுந்து, உங்களுக்கு எம்எல்ஏ பதவி போன பின் தான் கட்சியின் நிர்வாகிகள் தேவைப்படுகிறது. அதிகாரத்தில் இருக்கும்போது எந்த உதவியையும் செய்ய முன்வரவில்லை எனக் கூறிய தால் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

அதேபோன்று சின்னசேலம் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜேந் திரன் பேசும்போது, நிர்வாகிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆளும்கட்சியாக இருக்கும் போது, கட்சியி னரை மதிப்பதில்லை. தற்போது எதிர்க்கட்சியான நிலையில் தான் மற்ற நிர்வாகிகளும், தொண்டர்களும் நினைவுக்கு வருகிறார்களா என்பது போன்ற கேள்விகளை எழுப்பினர். இதற்கு ராஜேந்திரன் ஆதரவாளர்கள் எழுந்து கூச்சலிட மாவட்டச் செயலாளர் ஆர்.குமரகுரு அவர்களை அமைதிப்படுத்தினார்.

இந்த கூச்சல் குழப்பத்துக்கு இடையே ஒவ்வொரு ஒன்றியமாக உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு ஒருவழியாக கூட்டம் நிறைவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in