

விழுப்புரத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் உட்பட 4 மாவட்டக் கல்லூரிகள் சிதம்பரம்அண்ணாமலை பல்கலைக்கழகத் துடன் இணைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனியார் கல்லூரிக்கு இணையாக வசூலிக்கப்படும் கட்டணம் திருத்தியமைக் கப்படுமா என்ற கேள்வி எழுந் துள்ளது.
கள்ளக்குறிச்சிக்கு நேற்று வந்திருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியிடம், “4 மாவட்டக் கல்லூரிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் படும் என அறிவிப்பு வெளியிட் டுள்ளீர்கள். ஆனால், அந்த பல்கலைக் கழகத்தில் மருத்துவம், பொறியியல், கலை உள்ளிட்ட பட்டப் படிப்புகளுக்கான கட்டணங்கள், தனியார் கல்லூரிக்கு நிகரான கட்டணமே வசூலிக் கப்படுகிறது. எனவே அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் அரசுநிர்ணயிக்கும் கட்டணம் வசூலிக் கப்படுமா?” என இந்து தமிழ் திசை சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “ஒவ்வொன்றாக சீரமைத்து வருகிறோம். விரைவில் கட்டணம் திருத்தியமைப்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும்” என்று தெரிவித்தார்.