Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

கடலூர் மாவட்டத்தில் 79 பேருக்கு கரோனா :

கடலூர் மாவட்டத்தில் நேற்று 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 59,748 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 74 பேர் உட்பட 58,017 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 853 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தில் இதுவரை 802 பேர் உயிரிழந்துள்ளனர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 28,634பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 54பேர் உட்பட 27, 738 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 34பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 43,476 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 32 பேர் உட்பட 42,644 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 337 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x