

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் கெங்கவல்லி, ஆத்தூர், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.ஆட்சியர் கார்மேகம், எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோர் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கினர்.
இதில், 10 மற்றும் பிளஸ் 2 வரை பயின்ற 210 பெண் பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகையாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.52 லட்சத்து 50 ஆயிரமும், பட்டம் படித்த 243 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 21 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி என மொத்தம் 453 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 74 லட்சம் வழங்கப்பட்டது.
மேலும், தாலிக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் 3,624 கிராம் (453 பவுன்) ரூ.1 கோடியே 76 லட்சத்து 77 ஆயிரத்து 872 மதிப்பிலானதங்கம் வழங்கப்பட்டன.