

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு இணைய தளம்மூலம் நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் அரசு, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், சுயநிதி, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் உள்ளிட்ட 236 பள்ளிகளைச் சேர்ந்த 15,793மாணவர்கள், 16, 485 மாணவிகள் உள்ளிட்ட 32,278 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்டகல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்டத்தில்100 சதவீதம் தேர்ச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக், சுயநிதி, ஆதிதிராவிடர் நலன்பள்ளிகள் உள்ளிட்ட 186 பள்ளிகளைச் சேர்ந்த 10,075 மாணவர்கள், 10,754 மாணவிகள் உள்ளிட்ட 20,829 பேரும், தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட கல்வித்துறை அறிவித் துள்ளது.
செஞ்சி கல்விமாவட்டத்தில் 3,774 பேரும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 6,480 பேரும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 10,575 பேரும் என மொத்தம் 20,829 பேர் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 116 மேல்நிலைப் பள்ளிகளில் 19,896 பிளஸ் 2 பயின்ற மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட க் கல்வித் துறை அறிவித்துள்ளது.