

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் 150தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில், உறுப்பினராக சேர தேவையான விண்ணப்ப படிவம், அந்தந்த சங்கங்களில் வழங்கப்படுகிறது. கட்டணம் ரூ. 110. நேரில் செல்ல முடியாதவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து, கட்டணம் ரூ. 110-ஐ அஞ்சலகம் மூலம் செலுத்தி ரசீது எண், செலுத்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயர், முகவரி ஆகியவற்றையும் சேர்த்து தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.