

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தைச் சேர்ந்தவர்கள் பொன்சேகர் (43), வில்சன் ஹெரோபின் (39), வில்சன் ரஜினி ராஜா (35), அதிஷ்ட பாலன், செல்வம், கல்விளையைச் சேர்ந்த ஸ்டீபன். இவர்கள் அனைவரும் நேற்று திருநெல்வேலிக்கு சென்றுவிட்டு, காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மன்னார்புரம் விலக்கு அருகே சென்றபோது, கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே பொன்சேகர் உயிரிழந்தார்.
மற்ற 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். வில்சன் ஹெரோபின், வில்சன் ரஜினி ராஜா இருவரும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
அதிஷ்ட பாலன், செல்வம், ஸ்டீபன் ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கார் விபத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.