

தூத்துக்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் 46-வது வார்டு மற்றும் 47-வது வார்டில் 2021-ம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் பி.சந்தனசேகர் அமைப்பின் நோக்கங்கள் பற்றி பேசினார். 46-வது வார்டு தலைவராக முத்து லட்சுமணன், செயலாளராக சக்தி, துணை செயலாளர்களாக அர்ஜுனன், ஈஸ்வரன் தேர்வு செய்யப்பட்டனர்.
47-வது வார்டு தலைவராக ராஜேஷ், செயலாளராக மாரிமுத்து, துணை செயலாளர்களாக கோபாலகிருஷ்ணன், பாலா தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலவேசம், ஜீவானந்தம், ராமமூர்த்தி, காளீஸ்வரன், மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர்.