ஜூலை 22-ல் எரிசாராய ஏல விற்பனை : திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு

ஜூலை 22-ல் எரிசாராய ஏல விற்பனை :  திருவள்ளூர் ஆட்சியர் அறிவிப்பு
Updated on
1 min read

எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் ஜூலை 22-ம் தேதி எரிசாராய ஏலம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில், கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையால் 23 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது.

இந்த எரிசாராயத்தை, எரிசாராய உரிமம் பெற்ற நிறுவனங்கள் முன்னிலையில் வரும் 22-ம் தேதி மாலை 4 மணியளவில் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் ஏலம் விடப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in