கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் - ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் 15 மாற்றுத் திறனாளிகள் தேர்வு :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் -  ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் 15 மாற்றுத் திறனாளிகள் தேர்வு :
Updated on
1 min read

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ்கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திற னாளிகள் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலி வேண்டி மனு செய்திருந்தனர். இம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட ஆட்சியர் தர் தலைமையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார், முட நீக்கியல் மருத்துவர் கன்ராஜ், போக்கு வரத்து ஆய்வாளர் செல்வன், முதுகு தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு பிரதிநிதி கருணாகரன் ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

இந்நேர்முகத் தேர்விற்கு விண்ணப் பித்த 22 மாற்றுத்திறனாளிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 14 மாற்றுத்திறனாளிகள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர். நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களில் 6 மாற்றுத்திறனாளிகள் இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கும், ஒருமாற்றுத் திறனாளி மின்கலனால்இயங்கும் சக்கர நாற்காலி பெறு வதற்கும் தகுதியுடையவர்களாக தேர்வுக் குழுவினால் தேர்வு செய்யப்பட்டனர்.

எனவே அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் தங்களுக்குத் தேவையான நலத்திட்ட உதவி களை பெற மாற்றுத் திறளானிகள் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பித்து, அனைத்து நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in