புகார்களின்றி பயிர்க் கடன் வழங்க வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தல் :

புகார்களின்றி பயிர்க் கடன் வழங்க வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தல் :
Updated on
1 min read

திருவாரூர் ஆட்சியர் அலுவ லக கூட்ட அரங்கில், வங்கியாளர்களுக்கான கூட்டம் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்

தில், திருவாரூர் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஆண் டறிக்கை வெளியிடப்பட்டது.

பின்னர், ஆட்சியர் பேசிய போது, “பல்வேறு அரசுத் துறைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் கடன் திட்டங்களை தொடர் புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண் டும். விண்ணப்பித்து நிலுவை யிலுள்ள கடன் விண்ணப் பங்கள் மீது விரைந்து நடவ டிக்கை எடுத்து, உடனடியாக கடன்களை வழங்க வேண்டும். குறிப்பாக, பயிர்க் கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த கடன்களை வழங்குவதில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காமல், முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, வழங்க வேண்டும்” என வங்கியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில், மகளிர் திட்ட இயக்குநர் லேகா, இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் சங்கீதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் எழிலரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in