

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ளஏ.டி.எம். மையத்தில் பணத்தை எடுக்காமல்விட்டுச்சென்றவரிடம், பணம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்சுக்கனி (65). இவர்கடந்த மே 7-ம் தேதி ஸ்பிக் நகரில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் 10,000 ரொக்கப்பணத்தை எடுக்கச் சென்றுள்ளார். பணம் பரிவர்த்தனை முடிவடைவதற்குள் பணம் வரவில்லை என்று எண்ணிய சம்சுக்கனி, அதே அறையிலிருந்த மற்றொரு இயந்திரத்தில் 10,000 ரொக்கப்பணத்தை எடுத்துச் சென்றார்.
அவர் வீட்டுக்குச் சென்ற பிறகு செல்போனுக்கு இரு முறை ரூ.10,000 எடுத்ததாக எஸ்.எம்.எஸ். வந்தது. சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் அளித்தும் பலனில்லாததால், கடந்த ஜூன் 10-ம் தேதி தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், அந்த ஏ.டி.எம். மையம் மற்றும் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி. காட்சிகள், சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தவர்களின் விவரங்களை ஆய்வு செய்தார். சம்சுக்கனி ஏ.டி.எம்.இயந்திரத்திலேயே விட்டுச்சென்ற ரூ.10,000 ரொக்கப்பணத்தை, அவருக்கு அடுத்து வந்த நபர் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரிடமிருந்து பணத்தை போலீஸார் கைப்பற்றினர். அதனை, சம்சுகனியிடம் நேற்று எஸ்பி எஸ்.ஜெயக்குமார் ஒப்படைத்தார்.