

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ். முத்துசாமி ஆய்வு செய்தார்.
காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கியும், நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக முடிக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நீலகிரி மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் உடனிருந்தார்.