தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி :

தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி :
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கும் திட்டத்தில் தகுதி யுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்தடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும், பட்டம், பட்டயப்படிப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். மேலும் விவரங் களுக்கு மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரிலோ அல்லது 8925533998 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தேனி ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in