

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், தொழில் நெறி விழிப்புணர்வு வாரம் மற்றும் திறன் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி குறித்து விழிப்புணர்வு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பரிசுகளை வழங்கினார். தூத்துக்குடி வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநர் பேச்சியம்மாள் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.