வெள்ளி, டிசம்பர் 13 2024
Last Updated : 14 Jul, 2021 03:14 AM
Published : 14 Jul 2021 03:14 AM Last Updated : 14 Jul 2021 03:14 AM
காரைக்குடி: காரைக்குடி பொன்நகர் ரயில்வே கேட் அருகே அப்பகுதியைச் சேர்ந்த மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சில மாடுகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது திருச்சியில் இருந்து பாம்பன் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மாடுகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 8 மாடுகள் உடல் சிதறி இறந்தன. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்து ரயில் ஓட்டுநர் கொடுத்த தகவலின்பேரில் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT