சிறுவனை தூக்கி செல்ல முயன்ற : பெண்ணை மடக்கி பிடித்த பொதுமக்கள் :

சிறுவனை தூக்கி செல்ல முயன்ற  : பெண்ணை  மடக்கி பிடித்த பொதுமக்கள் :
Updated on
1 min read

கண்ணமங்கலத்தில் சிறுவனை தூக்கிச் செல்ல முயன்ற இளம்பெண்ணை பிடித்து காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அம்பேத்கர் நகரில் வசிப்பவர் செந்தில்குமார். இவரது மகன் சந்தோஷ்(3). இந்த சிறுவன், தனது வீட்டின் முன்பு நேற்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவ் வழியாக சென்ற இளம்பெண், சிறுவனை திடீரென தூக்கிக் கொண்டு புறப்பட்டபோது, சிறுவன் சத்தம் போட்டுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இளம்பெண்ணை பிடித்து, அவரிடம் இருந்து சிறுவனை மீட்டனர். பின்னர், இளம்பெண்ணை கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், “சிறுவனை தூக்கி செல்ல முயன்ற இளம்பெண், திருவண்ணாமலை அடுத்த தலையாம்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் பாபு மனைவி வள்ளி(32) என்பதும், வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, சொந்த கிராமத்துக்கு பேருந்தில் திரும்பும் வழியில் கண்ணமங்கலத்தில் கீழே இறங்கியதும், கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதும்” தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தலையாம்பள்ளம் கிராமத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு, அவரது உறவினர் களை வரவழைத்து வள்ளியை காவல்துறையினர் ஒப்படைத்தனர். இவர் மீது, வேலூர் காவல் நிலையத்திலும் குழந்தையை தூக்கி செல்ல முயன்றதாக குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in