வேலூர் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் இருந்து - பயோ டீசல் தயாரிப்புக்காக பயன்படுத்திய எண்ணெய் பெறும் திட்டம் : ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உணவகங்களில் பயன்படுத்திய எண்ணெயை மறுசுழற்சி முறையில் பயோ டீசலாக மாற்றும் திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். அருகில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் உணவகங்களில் பயன்படுத்திய எண்ணெயை மறுசுழற்சி முறையில் பயோ டீசலாக மாற்றும் திட்டத்தை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். அருகில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் உணவகங் களில் வீணாகும் எண்ணெயை பயோ டீசல் தயாரிப்புக்காக தனியார் நிறுவனம் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் உணவகங் களில் பொரிப்பதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட 52 நிறுவனங்கள் மூலம் விலைக்கு வாங்கி பயோ டீசலாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் பயோ டீசல் அரசே பெற்றுக்கொள்ளும் திட்டம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் சுமார் 75-க்கும் மேற்பட்ட உணவகங்களில் இருந்து தினசரி பயன்படுத்திய எண்ணெயை விலைக்கு வாங்கிக்கொள்ள பயோடெக் ஆயில் என்ற தனியார் நிறுவ னத்துக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலம் உணவகங்களுக்கு வழங்கப் படும் கேனில் பயன்படுத்திய எண்ணெயை சேகரித்து பிறகு லிட்டர் ஒன்றுக்கு ரூ.35 விலையில் தனியார் நிறுவனத்தினர் நேரடி யாகச் சென்று வாங்கிக்கொள்ள உள்ளனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், உணவக உரிமையாளர்களிடம் எண்ணெய் கேன்களை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஐஸ்வர்யா, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மருத்துவர் செந்தில்குமார், வேளாண் இணை இயக்குநர் மகேந்திர பிரதாப் சிங் தீக்ஷித், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை நியமன அலு வலர் மருத்துவர் செந்தில்குமார் கூறும்போது, ‘‘உணவகங்களில் பயன்படுத்திய எண்ணெயை பயோ டீசல் தயாரிப்புக்கு பயன் படுத்திக்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, வேலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 35 பெரிய உணவகங்களிடம் இருந்து பயன்படுத்திய எண்ணெயை தனியார் நிறுவனத்தினர் சேகரிக்க உள்ளனர்’ என்றார்.

வேலூர் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துரித உணவகங்கள், சிக்கன், பீப் பக்கோடா கடைகள் உள்ளன. இவர்களிடம்தான் பயன்படுத்திய எண்ணெய் அதிகளவில் உள்ளது. எனவே, துரித உணவகங்கள் மற்றும் பக்கோடா கடை உரிமை யாளர்களிடம் இருந்து பயன்படுத் திய எண்ணெயை திரும்பப் பெறு வதற்கான திட்டத்தை தீவிரமாக செயல் படுத்த வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in