தேனியில் வேளாண் கருவிகள் - வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் :

தேனியில் வேளாண் கருவிகள்  -  வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் :
Updated on
1 min read

நவீன வேளாண் இயந்திரங்கள், கருவிகள் அரசு சார்பில் குறைந்த விலைக்கு வாடகைக்கு விடப்படுகிறது.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் மண் தள்ளும் இயந்திரங்கள் 3, டிராக்டர்கள் 8, மண் அள்ளும் இயந்திரங்கள் 2 இருப்பில் உள்ளன. மேலும் நடவு செய்தல், விதைத்தல், களை எடுத்தல், கதிரடித்தல், வைக்கோல் கட்டுதல், வாழைத்தண்டை தூளாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு டிராக்டரால் இயங்கக்கூடிய கருவிகளும் உள்ளன.

டிராக்டருக்கு மணிக்கு ரூ.340, மண் அள்ளும் இயந்திரங்கள் மணிக்கு ரூ.660, நெல் அறுவடை இயந்திரம் ரூ.875 என வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் 94430 66308, 94863 63555 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் க.வீ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in