பணியின்போது இறந்த ஊராட்சி செயலர் மனைவி ஆட்சியரிடம் மனு :

பணியின்போது இறந்த ஊராட்சி செயலர் மனைவி ஆட்சியரிடம் மனு :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நல்லமுத்தான்பட்டியைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் (36). இவர் கஞ்சம்பட்டியில் ஊராட்சிச் செயலராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி தனட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு சிங்காரவேலன் கடந்த 2-ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த சிங்காரவேலனின் குடும்பத்தினருக்குக் கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் கிடைக்காமல் அவரது மனைவி தவித்து வருகிறார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனுக்கொடுக்க வந்த தனலட்சுமி கூறுகையில், கணவரின் திடீர் இறப்பால் இரு குழந்தைகளையும் வளர்க்க மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறேன்.

வறுமையில் வாடும் எனது குடும்பத்தைக் காப்பாற்ற எனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், பணப் பலன்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in