Regional02
மாட்டு வண்டியில் சென்று - காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் :
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து விருதுநகரில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி மாட்டு வண்டியில் ஊர்வலமாகச் சென்று காங்கிரஸ் கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து, கடந்த 7ம் தேதி முதல் 14-ம் தேதி வரை காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக விருதுநகரில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு , மாட்டு வண்டியில் ஊர்வலமாகச் செல்லும் நூதனப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு, சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜாசொக்கர் முன்னிலை வகித்தார். நகரச் செயலர் வெயிலுமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
