

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்(பொ) முத்துபாண்டி, இளநிலை ஆய்வாளர் ஜோதி மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.