ராமநாதபுரம் மாவட்டத்தில் -  மக்கள் நீதிமன்றத்தில்  53 வழக்குகளுக்கு தீர்வு  :

ராமநாதபுரம் மாவட்டத்தில் - மக்கள் நீதிமன்றத்தில் 53 வழக்குகளுக்கு தீர்வு :

Published on

ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, ராமேசுவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.

ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி மகிழேந்தி வரவேற்றார்.

மக்கள் நீதிமன்றத்தில் சிறு குற்ற வழக்குகள் 45, வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் 58, சிவில் வழக்குகள் 92 உள்ளிட்ட மொத்தம் 316 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 53 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் தீர்வுத் தொகையாக ரூ.10 கோடியே 32 லட்சத்து 7700 அறிவிக்கப்பட்டது.

வில்லிபுத்தூர்

வில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில், சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான கந்தகுமார் தலைமை வகித்தார். நீதிபதிகள், நீதிமன்ற நடுவர்கள் பங்கேற்றனர்.

மக்கள் நீதிமன்றத்தில் 511 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.2.05 கோடிக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in