Published : 11 Jul 2021 03:13 AM
Last Updated : 11 Jul 2021 03:13 AM

ஐடிஐயில் சேர : விண்ணப்பங்கள் வரவேற்பு :

திருவள்ளூர்

வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்கல்வி பயில இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன.

ஃபிட்டர், எலக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெல்டர், ஒயர்மேன் ஆகிய பிரிவுகளில் சேர குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சிக் கட்டணம் இல்லை.பயிற்சியில் சேரும் அனைவருக்கும் உதவித் தொகை மாதம் ரூ.750-ம், புத்தகங்கள், சீருடைகள் காலணிகள் மற்றும் இலவச பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம்வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x