ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர், அவரது கணவர் மீது - கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு தலைவர் எஸ்பியிடம் புகார் :

ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவர், அவரது கணவர் மீது -  கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு தலைவர் எஸ்பியிடம் புகார் :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர்கே.எம்.எஸ்.சிவகுமார்(45). அதிமுகவை சேர்ந்த இவர்,திருவள்ளூர் எஸ்பி வருண்குமாரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:

இளவயது முதல் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் நான், கடந்த 2011-16-க்குஇடைப்பட்ட ஆண்டுகளில் ஈகுவார்பாளையம் ஊராட்சித் தலைவராக பணிபுரிந்துள்ளேன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான், இட ஒதுக்கீடு அடிப்படையில்நேர்மையான முறையில் பொதுமக்கள் ஆதரவுடன் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரானேன்.

இந்நிலையில் ஈகுவார்பாளையம் ஊராட்சி தலைவரான உஷாவும், அவரது கணவர் தரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னுடைய சமூகப் பணியில் பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர். இச்சூழலில், கடந்த 7-ம் தேதி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, வெளியாட்களுடன் அங்கு வந்த தர், என்னை தரக்குறைவாக பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், என்னை சாதி பெயர் சொல்லி இழிவாக பேசினார். இதுகுறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

எஸ்பி சந்திப்பின்போது அவருடன் திருவள்ளூர் முன்னாள் எம்பி வேணுகோபால், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். இப்புகார் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்பிவருண்குமார் உறுதியளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in