

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா சிகிச்சையும் சேர்க்கப்பட்டதை அடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கென வே ஏராளமானோர் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா சிகிச்சை யும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட் டுள்ளது. இதையடுத்து அதிக அளவிலானோர் திட்டத்தில் பதிவுசெய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர முடியாமல் இருந்தனர்.
இந்நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட அலுவலகத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
இதுகுறித்து திட்ட அலுவலர்கள் கூறுகையில், ஊரடங்கால் வரமுடியாமல் இருந்த மக்கள் தற்போது பேருந்துகள் இயக்கப்படுதால் வரத் தொடங்கியுள்ளனர். கரோனா தொற்றுக்குப் பிறகு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது என்றனர்.