உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம்  :

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் :

Published on

தென்காசி மாவட்டத்தில் உள்ள வக்பு நிறுவனங் களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு வாகனத்தின் மொத்த விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவீதம் இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிசெய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் விண்ணப்பிக்கும்நாளில் குறைந்தபட்சம்5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை http://tenkasi.nic.in/forms என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி – 627811 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோஅல்லது நேரிலோ வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in