ராணிப்பேட்டை மாவட்டத்தில் -  17  காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் - 17 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் :

Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 17 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட் டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் 17 உதவிஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட் டுள்ளார். இதில், வாழப்பந்தல் மூர்த்தி அரக்கோணம் நகரத் துக்கும், அங்கிருந்த உஷா ராணிப்பேட்டை மகளிருக்கும், அரக்கோணம் கிராமியம் தாமோதரன் நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கும், சிப்காட் சிரஞ்சீவலு நெமிலிக்கும், அங்கிருந்த மெசிட் அவலூருக்கும், அங்கிருந்த தீபன் சக்கரவர்த்தி அரக்கோணம் கிராமியத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

காவேரிப்பாக்கம் துரையரசன் ராணிப்பேட்டைக்கும், அரக் கோணம் கிராமியம் சீனிவாசன் தக்கோலத்துக்கும், அங்கிருந்த ராஜா, அரக்கோணம் கிராமியத்துக்கும், வாலாஜா பிரபாகர் கலவைக்கும், அரக்கோணம் கிராமியம் விநாயகம் சோளிங்கருக்கும், ராணிப்பேட்டை சீனிவாசலு அரக்கோணம் கிராமியத்துக்கும், ராணிப்பேட்டை முத்தீஸ்வரன் வாழப்பந்தலுக்கும், சோளிங்கர் தாசன் சிப்காட்டுக்கும், கலவை எழுமலை சோளிங்கருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், சிப்காட் சிதம்பரம் மற்றும் காவேரிப்பாக்கம் வசந்த் ஆகியோர் மாவட்ட தனிப் பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in