கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி - தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு :

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி -  தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு  :
Updated on
1 min read

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ் ஆரம்ப வகுப்புகளில் சேர காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில், 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடக்கவுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள 107 மெட்ரிக் பள்ளிகள், ஒரு சுயநிதி பள்ளி மற்றும் 89 தொடக்க மற்றும் மழலையர் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்து rte.tnschools.gov.in. என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விரும்பும் பள்ளியைத் தேர்வு செய்து, ஆகஸ்ட் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் 14 ஒன்றியங்களில் செயல்படும் வட்டாரக் கல்வி அலுவலகங்களிலும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம்.

இச்சட்டப்படி, எல்.கே.ஜி அல்லது முதல் வகுப்பிற்கு விண்ணப்பிக்க வீட்டு முகவரியிலிருந்து பள்ளிக்கு அருகாமையிடம் என்பது 1 கிலோ மீட்டர் ஆகும். பிறப்பு, இருப்பிடச் சான்று, மருத்துவமனை பிறப்பு பதிவு, அங்கன்வாடி பதிவேடு நகல், பெற்றோர் அல்லது பாதுகாவலரால் வயது நிரூபிக்க எழுத்து மூலம் அளிக்கப்பட்ட உறுதிமொழி, பெற்றோர் மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை, குழந்தையின் புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in