Published : 08 Jul 2021 03:13 AM
Last Updated : 08 Jul 2021 03:13 AM

தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் - இணையவழியில் பாடத்திட்ட வல்லுநர் குழுக் கூட்டம் :

விழுப்புரத்தில் உள்ள தெய் வானை அம்மாள் மகளிர் கல் லூரியின் 13-வது பாடத்திட்ட வல்லுநர் குழு கூட்டம் இணைய வழியாக 2 நாட்கள் நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வரும் பாடதிட்ட வல்லுநர் குழுவின் தலைவரு மான பிருந்தா, 2021 – 2024- ம் கல்வி ஆண்டுக்கான முதுகலை மற்றும் இளங்கலை பட்ட வகுப்புகளுக்கான பாடத்திட்ட வடிவமைப்பு குறித்தும், கல்லூரியின் நிகழ்வுகள் குறித்து உரை ஆற்றினார்.

கல்விக்குழுமத்தின் பதிவாளர் செளந்தரராஜன் சிறப்பு ரையாற்றினார். கல்லூரியின் செயலாளர் செந்தில் குமார் தலைமை உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “கரோனா காலத்தில் மாணவி களின் நலன் காக்கும் விதத்தில் கல்லூரியின் சிறப்புமிகு செயல்பாடுகள், இணைய வழிக்கல்வி மற்றும் தேர்வு முறையை நன்முறையில் செயல்படுத்திய முறை குறித்து உரையாற்றினார்.

மேலும், மாணவிகளுக்கான கருத்தரங்குகள் மற்றும் விவாத அரங்குகள் நடத்தப்பட்ட திறம் குறித்தும் சிறப்புரை யாற்றினார்.

பாடத்திட்ட வல்லுநர் குழு கூட்டத்தில், திருவள்ளுவர் பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர் ஜெகதீசன், வேதியியல் துறைத்தலைவர் முனைவர் ஆறுமுகம், பொருளாதார துறை யின் பேராசிரியர் தண்டபாணி ஆகியோர் கல்லூரியின் புறமதிப்பீட்டாளர்களாகவும், சென்னை புனித தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் செல்வராஜ், மதுரை லேடி டோக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் மெர்சி புஷ்பலதா, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கல்வி தொழில்நுட்பத் துறையின் தலைவர் முனைவர் ராம்கணேஷ் மற்றும் பெங்களூரு ஒளியியல் மற்றும் துணைமை பொறியியல் நிறுவனத்தின் துணைத்தலைவர் சசிதர் ஆகியோரும் கலந்து கொண்டு பாடத்திட்ட கட்டமைப்பு குறித்த கருத்துக்களை அளித்தனர். மேலும் சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் தேவைகள், பல்லூடக பயன்பாட்டில் முன்னிலை, தரமான கல்விமுறை, மாணவிகளுக்கான தேவைகளை முதன்மையாக முன்னேடுக்கும் கல்லூரி என சிறப்பித்ததுடன், துறைச்சார்ந்த பாட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தனர். அகிலா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x