

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
உசிலம்பட்டியைச் சேர்ந்த அபிஷேக் (21), நவீன் (22) ஆகியோர் நரிக்குடி அருகே உள்ள உலக்குடியைச் சேர்ந்த நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றனர். பின்னர், இரு சக்கர வாகனத்தில் நேற்று மாலை உசிலம்பட்டிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற கருப்புச்சாமி (49) என்பவர் மீது பைக் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் நவீன், கருப்புச்சாமி ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அபிஷேக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.